வடிவேலு காமெடில வர இந்த மியூசிக் தான இது ! அதே மியூசிக்.. தீயாய் பரவும் வீடியோ பதிவு !
கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.
இப்படத்தில் இருந்து ரிலீசான ‘பத்தல பத்தல’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இதில் இடம்பெற்ற ஒரு சில வரிகள் குறித்து தற்போது சர்ச்சை எழுந்தது.

‘கஜானாலே காசில்லே கல்லாலையும் காசில்லே காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே ! சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே ! ‘
என்னும் வரிகள் மத்திய அரசை குறித்து பேசியது போல இருக்கிறது என்றும், இன்னும் சில வரிகள் ஜாதிய ரீதியாக பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
அந்த வரிகளை நீக்கக் கோரி நடிகர் கமல்ஹாசன், அனிருத், லோகேஷ் கனகராஜ், சோனி மியூசிக் கம்பெனி,ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் ஆகியோர்களுக்கு, வழக்கறிஞர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டது.
இந்நிலையில், தற்போது இப்பாடல் வடிவேலு காமெடி ஒன்றில் வரும் மியூசிக் என தற்போது ஒரு வீடியோவை நெட்டிசன்கள் கண்டுபிடித்து வைரல் செய்து வருகின்றனர்.
பொதுவாக ஒரு சில பாடல்கள் ஹிட் ஆனாலும், அது காபி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்று தான். அப்படி தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
#PathalaPathala Copied From #Vadivelu Comedy pic.twitter.com/O8PWAFxoBf
— chettyrajubhai (@chettyrajubhai) May 19, 2022