'நடிப்பதை இதுக்கு மேல நிறுத்தப்போவதாக சொன்ன விஜய் !' - பேட்டியில் இயக்குனர் வெளியிட்ட தகவல் !
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாக இவரது திரைப்படம் குறித்த எதாவது ஒரு அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் விழாவாக மாற்றி விடுவர்.
அந்த வகையில், விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிக்கும் தளபதி66 திரைப்படத்தை தோழா திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். ரஷ்மிகா, பிரபு, சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா, ஷாம் போன்ற பல பிரபல பட்டாளமே ஒன்றிணைந்துள்ளது. அவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சமீபத்தில் அடுத்தடுத்து வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான விஜய் மில்டன் நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய்யின் ஆரம்பகால படங்களில் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அப்போது விஜய்யுடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் விஜய் மில்டன். தன்னிடம் விஜய் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை என்றும், 2000ம் ஆண்டுக்கு பிறகு இயக்குனராக போகிறேன் என விஜய் சொன்னார்.
ஆனால் அதை பற்றி தற்போது யோசித்து கூட பார்க்க முடியாத அளவு பெரிய நடிகராகிவிட்டார் என விஜய் மில்டன் கூறியுள்ளார்.