BB Ultimate வீட்டை விட்டு வெளியேறிய வனிதா..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஷோவும் ஒன்று. பிக் பாஸ் தொடங்கி 5 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், இது அனைத்தையும் கமல் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது, புதுமுயற்சியாக OTT தளத்தில் BB அல்டிமேட் என்னும் ஷோ தொடங்கி 24 பனி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 5 சீசன்களில் இருந்து சில போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து நடத்தி வரும் இந்த ஷோவ்வில் ஆரம்ப நாளில் இருந்து சண்டை சச்சரவுக்கு குறைச்சலே இல்லை. கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் பணிச்சுமை காரணமாக விலகுவதாக அறிவித்தார்.
இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என பிசியாக இருப்பதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் அறிவித்தார். ஏற்கனவே கமல் கொரோனா காரணாமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலையில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
ஆதலால் அவரே தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் கமலுக்கு பதில் சிம்பு ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சியில் கமல் வெளியேறியதில் இருந்தே ஹவுஸ்மேட்ஸிடம் ஏடாகூடமாக பேசி சண்டையிட்டு வந்த வனிதா, தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் வருவார் என நினைத்து ‘என்னை வெளியே அனுப்பிவிடுங்கள்’ என கேட்டு வெளியேறிவிட்டாராம் வனிதா. ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை மனதில் வைத்து வனிதா வெளியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.