இப்போ எதுக்கு'டா OTT பத்தி பேசறீங்க..? வலிமை OTT குறித்து வெளியான தகவல்..
3 ஆண்டுகள் தவத்திற்கு பிறகு கிடைக்கும் வரம் போல அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை. தமிழக தியேட்டர்களில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு ரிலீசாக உள்ள முதல் முன்னணி நடிகரின் பெரிய பட்ஜெட் படம் என்பதால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள படம் வலிமை படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளதாக கூறபட்டு வந்த நிலையில், யுவனின் இசையில் டைரக்டர் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாக்கப்பட்ட ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி, செகண்ட் சிங்கிள் அம்மா பாடல் வெளியாகி தாறு மாறாக ஹிட் அடித்தன.
இந்நிலையில் புதிய தகவலாக இப்படத்திற்கு யுவன் மட்டும் அல்லாது ஜிப்ரானும் இணைந்து இசையமைத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படவுள்ள வலிமை படத்தின் முதல் நாள் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 மட்டுமின்றி, அதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு அதிகாலை 4 மணி ஷோ திரையிட அனுமதி பெற்றுள்ளார்களாம். தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 மணி நேரம் 58 நிமிடங்கள் கொண்ட வலிமை படத்திற்கு யுஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, பட்ஜெட் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான தொகையை பெற்றுள்ளது.
பிப்ரவரி 24 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்பு, ஏப்ரல் 14 ம் தேதி ஓடிடியில் வலிமை படம் ரிலீசாக உள்ளது. வலிமை படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜீ நிறுவனம் வாங்கி உள்ள நிலையில், ஜீ ஓடிடி தளத்தில் வலிமை ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.