அடுத்தடுத்து வெளியான வலிமை 2 PROMOக்கள்.. படத்த இப்டியே ரிலீஸ் பண்ணிருவாங்களோ..

Valimai 2 promo got released which is getting trend on internet

வருகிற 24ம் தேதி ஒரு பிரமாண்ட தினமாகவே அஜித் ரசிகர்களுக்கு மாறவுள்ளது. 3 வருட காத்திருப்பிற்கு பின்னர் வெளியாகவிருக்கும் வலிமை திரைப்படம் எதிர்பார்ப்பை கூடி வருகிறது. அப்டேட் அப்டேட் என கேட்டபோதெல்லாம் மௌனம் காத்த தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது 2 நாளுக்கு ஒரு அப்டேட் என படத்தையே அப்டேட் மூலம் வெளியிட்டுவிடுவார் போல.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீஸ் ஆகவிருக்கும் வலிமை திரைப்படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம், கேரள தியேட்டர் ரிலீஸ் உரிமையை புஷ்பா, மாநாடு படங்களை ரிலீஸ் செய்த E4 Entertainment நிறுவனம், தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, POWER of GOOD vs POWER of EVIL, POWER of emotions என போனி கபூர் வெளியிட்ட வீடியோக்கள் செம வைரலாகி வருகிறது.

Share this post