சைக்கோ வில்லனாக ஜெய்.. திக் திக் சீன்கள்.. பதறவைக்கும் பட்டாம்பூச்சி பட டீசர்..
நடிகர்கள் வில்லன் கதாபாத்திரம் ஏற்கும் போது அதற்கு ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பு வேற லெவல் இருக்கும். அதிலும், சைக்கோ த்ரில்லர் படம்னா சொல்லவா வேணும். அப்படி, அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் சுந்தர்.சி, ஜெய் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் பட்டாம்பூச்சி.

அடுத்தடுத்து வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரவேற்பை காட்டிலும், இந்தப்படத்தின் டீசரும் படு த்ரில்லாக உள்ளது. 1980களில் நடக்கும் இந்த சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர்.சி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, சைக்கோ வில்லனாக ஜெய் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஹனி ரோஸ் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி செய்துள்ளார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பத்ரி இயக்கியுள்ளார்.
Share this post