கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசம், நகைச்சுவை.. பக்கா என்டர்டைனர் ஒன்னு ரெடி ஆகுது..

Sundar c's upcoming film with jai, jeeva and dd photos are revealed

சுந்தர் சி ஹீரோவாக நடித்து வெளியான தலைநகரம் படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நடிகர் என இரட்டை பணியில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி தற்போது அடுத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 2016ம் ஆண்டு வெளியான கபூர் & சன்ஸ் படத்தின் ரீமேக் என யூகங்கள் வெளியான நிலையில், அவ்னி சினிமாக்ஸ் மூலம் படத்தை தயாரிக்கும் குஷ்பூ சுந்தர் சமூக ஊடகங்களில் அவற்றை மறுத்தார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா என 3 பேர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெறவுள்ள நிலையில், ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Sundar c's upcoming film with jai, jeeva and dd photos are revealed

படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பூஜையுடன் தொடங்கி அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி இணைந்துள்ளார். இது குறித்து டிடி புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவிற்கு குஷ்பூ, நானும் சீக்கிரம் இணைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share this post