'வாய்ப்புக்காக சேனல் ஹெட் இப்டி பண்ண சொன்னாங்க..' ஓப்பனாக பேசி பகீர் கிளப்பிய ஸ்ரீநிதி..
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.
தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் ஸ்ரீநிதி, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பது வெளியே செல்வது மேலும் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து சாதாரணமாக இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் திருப்பி பாதித்து விட்டது.

அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், மெசேஜ் மூலமாகவும் மோசமாக கமெண்ட் செய்தும் பேசி அவரை மனஉளைச்சலுக்கு ஆளாகியதாக, அவர் சந்தித்த இன்னல்கள், மனப்போராட்டங்கள் குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி. எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் சிம்பு. இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு.

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பி வந்தார்.
“ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க, கத்துரதுக்கு எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! வேணும், பாக்கனும், இப்பவே” என சிம்பு வீட்டு வாசலில் இருந்து ஸ்டேட்டஸ் பதிவிட்டு வந்தார்.

ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல செய்திகள் இணையத்தில் உலா வந்தது. இதனை கண்டு அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா.
சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே’ என பதில் கூறியிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். இந்த விஷயம் இணையத்தில் செம வைரல் ஆனது.
இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டா லைவ் வீடியோவில் அவரது தோழி மற்றும் நடிகையான நக்ஷத்திரா தவறான ஒருவருடன் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார் என்றும், விஜே சித்து தவறான ரிலேஷன்ஷிப்பை தேர்வு செய்ததால் அவருக்கு நடந்தது நக்ஷத்திராவுக்கும் நடக்கலாம். நான் இப்போதே இதை சொல்வது அதனால் தான்.

நக்ஷத்திராவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவர் இறந்தால் கூட அவரது சாவுக்கு நான் செல்லமாட்டேன் என கூறி ஸ்ரீநிதி பகீர் கிளப்பி வந்தார்.
இவரது இந்த பதிவுகளுக்கு விளக்கமளித்த நக்ஷத்திரா, ஸ்ரீநிதி depressionல இருக்க நாள இப்டி பேசுறா என கூறியிருந்தார். மேலும், ஸ்ரீநிதியின் தாயாரும் இதுகுறித்து நிறைய பேட்டி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், பிரபல ஆன்லைன் சேனலுக்கு பேட்டியளித்த ஸ்ரீநிதி, ‘Sreenidhi பேசுறது பொய்னு முடிஞ்சா சிம்புவ சொல்ல சொல்லுங்க, விண்ணைத்தாண்டி வருவாயா & போடா போடி என் கதை. நான் நடந்துக்கறத கதையா எடுத்திருக்காங்க என கூறி பரபரப்பை கிளப்பினார்.

மேலும், அந்த பேட்டியில் ஸ்ரீநிதி பேசிய போது, ‘‘ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என சொல்லி ஆபிசுக்கு வர சொன்னார்கள். ஆனால், அது பார்ப்பதற்கு வீடு போல இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அது ஆபிஸ் செட்டப் என தெரிந்தது. அப்போது, அந்த சேனல் ஹெட் என்னை அவர் மடியில் உட்கார சொல்லி, என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். ஷாக் ஆன நான், கீழே நண்பர்கள் இருப்பதாக சொல்லி அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். தலையே சுற்றிவிட்டது. நல்லவேளை நான் தப்பித்து கொண்டேன். இருப்பினும், அவரின் பெயரை சொல்ல நான் விரும்பவில்லை’’ என தெரிவித்துள்ளார்.