Don Promotion போது மேடையில் டென்ஷன் ஆனாரா SK ! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மே மாதம் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் இருந்து வெளியான எல்லா பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு சில நிமிடங்கள் கோபம் அடைந்து செய்தது குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.
மேடையில் போட்டோ எடுக்கும் சமயம் பாலா தொடர்ந்து பேசி கொண்டிருந்ததால் சிவகார்த்திகேயன் அவரைக் கூப்பிட்டு வாயில் கை வைத்து அமைதியாக இரு என கூறியுள்ளார்.
இந்த வீடியோ பார்த்து சிவகார்த்திகேயன் கடுப்பாகிவிட்டாரா என கூறி சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வீடியோ வைரலாக பரவி வருகிறது.