'பெண்கள வேட்டையாடுறது ரொம்ப பிடிக்கும்..' மிரட்டலான சிபியின் 'ரங்கா' டிரைலர் !
பிரபல தமிழ் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகன் சிபி. ஸ்டுடென்ட் நம்பர் 1 என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், அதனைத் தொடர்ந்து, ஜோர், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ், லீ, நெஞ்சில், நாணயம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, கபடதாரி போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். தற்போது, ரங்கா, மாயோன், ரேஞ்சர், வட்டம் போன்ற படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் வினோத் டி.எல் இயக்கத்தில் நடிகர் சிபி நடித்துள்ள திரைப்படம் ‘ரங்கா’. இப்படத்தில் நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். ரங்கா திரைப்படம் வருகிற 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ள சிபிக்கு வலதுகை அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இப்படி ஒரு மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு ரங்கா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.