'விஜய் சேதுபதி இல்லனா சமந்தா & நயன் நடிச்சுருக்க மாட்டாங்க.. ' ரசிகர் கமெண்டுக்கு பதிலளித்த சமந்தா !
போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலில் விழவே, தற்போது 6 வருடங்கள் கடந்து இவர்கள் காதல் கதை நீடித்து வருகிறது.

இவர்களது ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி திரையரங்குகளில் விசிட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தா மட்டும் வேறு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவர் இந்த படத்தின் எந்த கொண்டாடத்திலும் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், இப்படத்தில் சமந்தாவிற்கு தான் பெரும் வரவேற்பு என்பது உண்மை. கதிஜா கதாபாத்திரம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமந்தா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விக்கும், விமர்சனங்களுக்கும் பதில் கூறி வருகிறார்.

அதில், ரசிகர் ஒருவர், என்னதான் சிறந்த நடிப்பை காட்டினாலும், விஜய் சேதுபதி கொஞ்சமாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் அட்வைஸ் என கூறி இருந்தார். மேலும், இன்னும் சிலர், வேறு நடிகர் நடித்திருக்கலாம் எனவும் கூறினார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் ‘பலரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு எந்த நடிகராவது நடித்து இருந்தார் நல்ல இருந்திருக்கும் என்று கூறி வருகின்றனர்.

ஆனால், உண்மை என்னவெனில் விஜய் சேதுபதி இல்லை என்றால் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருக்க மாட்டார்கள் என பதிவிட்டு இருந்தார். இதற்கு சமந்தாவும் உண்மை என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.