அழகான ராட்சசியே.. கார்ஜியஸ் லுக்கில் பிரியங்கா மோகன்.. Latest Photos
தமிழ் மொழியில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, அர்ச்சனா, தீபா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி தியேட்டரில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் நுழைந்தவர் நடிகை பிரியங்கா மோகன். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா’ பாடல் மூலம் இளைஞர்களுக்கு பேவரைட்டாக மாறிவிட்டார்.
சூப்பர் கூல் மற்றும் டால் போன்ற வசீகரமான தோற்றம் கொண்டுள்ள பிரியங்கா மோகன், கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ் மொழி திரையுலகில் தற்போது அடியெடுத்து வைத்துளார்.
மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இதனால், கூடிய விரைவில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடிப்பார் என கோலிவுட் வட்டாரம் மத்தியில் பேசப்படுகிறது.

படங்களில் பேமலி கேர்ள் தோற்றம் இருந்தாலும், சோசியல் மீடியாக்களில் ஹாட் அண்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
