விக்ரம் 'பத்தல பத்தல' பாட்டுல இந்த வரிகள் நோட் பண்ணுங்க? இப்டி ஓபன்'ஆ அரசியல் பேசிருக்காரு ! உதயநிதிக்கு தெரியுமா இது ?
அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்பாடலை கமல் அவர்களே எழுதி பாடியுள்ளார்.
அந்த பாடல் வரிகளை கவனித்தால் பல்வேறு மறைமுகமான கருத்து உள்ளது போல இருக்கிறது.
‘கஜானாலே காசில்லே கல்லாலையும் காசில்லே காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே ! சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே ! ‘
என பாடி எழுதியுள்ளார் கமல்ஹாசன்.
தற்போது யாருடைய ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். கமல் பாடியது ஒன்றியம் என மத்திய அரசை தான். இருந்தாலும் அதற்கு வீணாக ரிலீஸ் சமயத்தில் எதிர்ப்பு வரும் வீண் டென்ஷன் வரும் என ரசிகர்கள் ஒரு பக்கம் பயத்தில் உள்ளனர்.

இருந்தாலும், தமிழகத்தில் படத்தை வெளியிடுவது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின்என்பதால் தியேட்டர் அதிபர்கள் கொஞ்சம் நிம்மதியில் இருப்பர்கள். இந்த பாடல் வரிகள் விஷயம் உதயநிதிக்கு தெரிந்திருக்குமா இல்லையா என்பது தான் சினிமா வாசிகளின் கேள்வியாக உள்ளது.