நெல்சன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் 'தலைவர் 169' படத்தின் ஹீரோயின் குறித்து வெளியான தகவல்..!
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகி ரூமராக பரவி வருகிறது. ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2010ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏற்கனவே நடித்திருந்தார்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் மீண்டும் ஜோடியாக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.