ஜென்டில்மேன் 2 படத்தில் நயன்தாரா ? இது முதல் பாகத்த விட பயங்கரமா இருக்கும் போலயே !

Nayanthara to act as heroine lead in gentleman 2

1993ம் ஆண்டு கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை மிகப்பெரிய பிளஸ். பாடல்கள், கவுண்டமணி-செந்தில் காம்பினேஷனில் கலக்கல் காமெடி காட்சிகள், ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் காட்சிகள், கதை அனைத்தும் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

Nayanthara to act as heroine lead in gentleman 2

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது தயாராக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் தான் இப்படத்தையும் தயாரிக்க என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

Nayanthara to act as heroine lead in gentleman 2

மேலும் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர், நடிகர் அர்ஜுன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதையும் அவர் கூறினார். அவர்களுக்கு பதில் புதிய கூட்டணியில் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் திட்டமிட்டுள்ளார்.

பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவித்த நிலையில், ஜென்டில்மேன் 2 படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this post