'சைக்கோ.. ஏன் இப்படிலாம் பண்ற..' விக்கியை செல்லமாக திட்டிய நயன் ! இதுக்காக தானா !
போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இத்திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் இவரது இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்றது.

பின்னர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு போது நயன்தாரா மற்றும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 6 வருடங்கள் கடந்து இந்த காதல் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள். நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக நயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது, அதிகம் கோவில்களுக்கு விசிட் அடித்து வரும் விக்னேஷ் சிவன் - நயன் தம்பதி இவர்களது ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இப்படத்தின் ப்ரோமோஷன்காக ஒரு பேட்டியில் பங்கேற்றனர். அப்படி அளித்த பேட்டியின் போது, நானும் ரவுடி தான் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு நயன்தாராவுக்கும் கிளோஸ் அப் சீன் எடுத்த போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முன்னாடியே காதலில் இருந்துள்ளனர்.

அந்த சீன் எடுக்கும் போது, நயன்தாரா இதை வேண்டுமானால் வேறு மாதிரி மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

இதில் என்ன இருக்கிறது என நினைத்து, ஓகே எடுக்கலாம் என விக்கி முடிவு செய்ததாகவும், அந்த சீன் எடுக்கும் போது, இன்னும் நெருக்கமாக வாங்க, இன்னும் வாங்க என நான் சொன்னதால் கடுப்பான நயன்தாரா, மெதுவாக பக்கத்தில் வந்து, சைக்கோ, ஏன்டா இப்படிலாம் பண்ற என திட்டிவிட்டு போனார் என கூறியுள்ளார். இந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.