சட்டை.. போஸ்.. லுக்.. எல்லாமே உக்கரம்மால்லடா இருக்கு.. மேகா ஆகாஷை ஏடாகூடமாக வர்ணிக்கும் பேன்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா, சசிகுமார், மாளவிகா மோஹனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகை மேகா ஆகாஷ். இதற்கு முன்னர், 2017ம் ஆண்டு, தெலுங்கு மொழியில் லை என்னும் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன், அதர்வாவுடன் பூமராங், தனுஷ் உடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் மூலம் இளசுகளின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.
ஒரு சில படங்களின் நடித்ததன் மூலமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மேகா ஆகாஷ், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என செம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது, தமிழ் மொழியில், யாதும் ஊரே யாவரும் கேளிர், அக்டோபர் 31 லேடிஸ் நைட் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
மேலும், ஒரு சான்ஸ் குடு, தப்பு பண்ணிட்டேன் உள்ளிட்ட ஆல்பம் பாடல்களிலும், குட்டி ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ்’லும் நடித்துள்ளார். தற்போது, தனது சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருக்கும்படி பார்த்து கொள்கிறார் மேகா ஆகாஷ்.


