அண்ணனா தாலாட்டும்.. மாறன் 2வது பாடல்.. வெளியான அப்டேட்

Maran 2nd single to be released tomorrow which shows brother sister love

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ம்ருதி வெங்கட், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாறன். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளனர். இந்நிலையில், மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. “அண்ணனா தாலாட்டும்” என்ற பாடல் நாளை(19.2.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post