Trending photo : திருமண அழைப்பிதழில் KGF 2 டயலாக்.. note பண்ணுங்கப்பா note பண்ணுங்கப்பா !
கன்னட மொழி திரைப்படமான கே.ஜி.எஃப் முதல் பாகம் மொழிகளை கடந்து பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கினர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நாயகனாக நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும் வில்லனாக சஞ்சய் தத்தும் நடித்திருந்தனர். மேலும் ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்போடு கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வசூலையும் வெற்றி விமர்சனங்களையும் வாரிக் குவித்து வருகிறது. அதன்படி இப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, யாஷ் பேசும் “Violence…Violence…Violence…I dont like it… I avoid… But Violence likes me… I cant avoid” என்ற வசனம் மிகவும் பேமஸ் ஆனது. இதை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு வைரல் ஆகின.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லகாவியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் வயலன்ஸ் என்கிற டயலாக்கை சற்று மாற்றி திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
