"'ஒன்றியத்தின் தப்பாலே' சர்ச்சை கிளப்பிய இந்த வரிக்கு இதுதான் அர்த்தம்" - கமல் கொடுத்த விளக்கம்
கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். 1986ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் அப்படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான அப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து, கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இருந்து கடந்த வாரம் ரிலீசான ‘பத்தல பத்தல’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.
சென்னையில் விக்ரம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் செய்தியாளர் ஒருவர், விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் 3ஆ? அல்லது இந்தியன் 2 ? வெளியாகுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கமல், இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
விக்ரம் 3 பற்றி லோகேஷ் கனகராஜ் தான் முடிவு செய்ய வேண்டும், ஏன் என்றால் விக்ரம் 3க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர் என்பதை தான் முடிவு செய்து விட்டேன். அவரிடமே கேட்கவில்லை. என்று மேடையிலேயே சஸ்பென்சை உடைத்தார் கமல்ஹாசன்.

சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து கேன்ஸ் விழாவிற்கு சென்றிருக்கும் கமல் ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விக்ரம் படத்தில் நான்காவது ஒருவர் வருவதாக வதந்தி பரவி வருகிறதே என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல், வதந்தி எல்லாம் இல்லை. உண்மை தான். அது சூர்யா தான், அற்புதமான ரோலில் கடைசி நிமிடத்தில் தோன்றி நடித்துள்ளார்.
அவருடைய கதாபாத்திரம் தான் ‘விக்ரம்’ படத்தின் 3ம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும். இதை கேட்ட ரசிகர்கள் என்னது விக்ரம் பார்ட் 3 வருதா என ஆச்சரியமாக கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விக்ரம் ரிலீஸ் குறித்து தகவல் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, விக்ரம் பாடலில் கமல் ‘ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னுமில்லே இப்பாலே’ என கமல் பாடியிருந்தார். அது சர்ச்சையை ஏற்படுத்தி, கமல் ஒன்றிய அரசை குறை கூறுகிறார் என அவர் வக்கீல் நோட்டிஸ், போலீஸ் புகார் என அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கமல் ‘ஒன்றியம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறி இருகிறார். ‘பத்திரிகையாளர்கள் கூடினால் அது ஒன்றியம், தயாரிப்பாளர்கள் கூடி சங்கம் நடத்தினால் அது ஒன்றியம் தான்’ என கமல் கூறி இருக்கிறார். இந்த பெரிய சர்ச்சைக்கு கமல் கொடுத்த விளக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.