பிறந்த அடுத்த நொடி குழந்தையை என் நெஞ்சில் சுமந்த அந்த தருணம் - காஜல் அகர்வாலின் உருக்கமான இன்ஸ்டா பதிவு
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மொழியில், துப்பாக்கி, மாற்றான், விஸ்வாசம், மாரி 1 போன்ற படங்களில் விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள காஜல், தெலுங்கிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார்.

தனது பேபி பம்ப் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த காஜல், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது, நேற்று, நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி அறிந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாகி வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு, தனது குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நீல் என்ற பெயர் குட்டியாக இருந்தாலும் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீல் என்றால் சாம்பியன் என்று அர்த்தமாம்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு நீல் கிட்சலு என்ற பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது
இந்த நிலையில் தனது பிரசவம் குறித்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு அதிகம் பேசப்பட்டு வருகிறது.