'கோபியாக நடிப்பதால் பிரச்சனை.. எங்க போனாலும் திட்டுறாங்க..' கலக்கத்துடன் பாக்கியலட்சுமி நடிகர் வெளியிட்ட வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம்.
அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று.
சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை.
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. கோபியின் அப்பா பிறந்தநாளை கொண்டாட இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.
இதில் ஹைலைட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவர்களின் செயல்களுக்கு கோபியின் ரியாக்ஷன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனது குடும்பத்தையும், ராதிகாவையும் சமாளிக்கவே போராடும் கோபி இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார்.

இந்நிலையில், மூர்த்தி மற்றும் தனம், கோபியின் வேலைகளை கண்டுபிடித்து அதனை வீட்டின் அனைவரது முன்பும் போட்டுடைக்கிறார். இதன் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்தது.
கோபி மூர்த்தியிடம் தனது தவறை ஒத்துக்கொள்ளாது விடாப்பிடியாக பேசி வருவது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
மேலும், சதிஷ் (கோபியின் உண்மை பெயர்) தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவரை ரசிகர்கள் கோபமடைந்து தன்னை பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது. அவர் சீரியலில் நெகடிவ் ரோலில் நடிப்பதால் அவரை நிஜத்திலேயே அதிகம் பேர் திட்டுகிறார்கள்.
அது பற்றி தான் வருத்தமாக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவர்.