Viral Video : எடிட்டர் இதெல்லாம் மறந்துட்டாரா.. வலிமை படத்தில் பிரேமில் தெரியும் மானிட்டர்.. தவறுகளை வீடியோவாக வெளியிட்ட நெட்டிசன்ஸ் !

Fan notices mistakes during edit of valimai film the video getting viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர், 3 வருடங்கள் பிறகு வெளியான திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா போன்றோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை.

Fan notices mistakes during edit of valimai film the video getting viral

இப்படத்தின் வசூல் மற்றும் விமர்சனம் குறித்து அடுத்தடுத்து தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், வலிமை படத்தில் ரசிகர் ஒருவர் அதில் இருக்கும் தவறுகளை வீடியோவாக வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

Fan notices mistakes during edit of valimai film the video getting viral

அஜித் ஜீப்பிலிருந்து இறங்கும் காட்சியில் கதவை திறப்பதற்கு முன்பாகவே கால் வெளியில் வருகிறது. இதனைச் சுட்டி காட்டிய ரசிகர் எடிட்டர் கூட சரியா வேலை பார்க்கல என கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு காட்சியில் பிரேமில் மானிட்டர் தெரிகிறது. இதனையும் ரசிகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this post