ஸ்டைலாக வேற மாறி தோற்றத்தில் செல்வராகவன்.. இது 2வது இன்னிங்ஸ் போல

Director selvaragavan changed his body style for his upcoming movies

இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். சாணிகாயிதம் என்னும் அருண் மாதேஸ்வரன் படத்தில் கதாநாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். மேலும், தளபதியின் பீஸ்ட் படத்தில் முக்கிய அரசியல்வாதி வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது. ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

நடிகர் அந்தஸ்துக்கு ஏற்ற வாறு தனது உடல்வாகை மாற்றி வரும் இவர், தனது பீஸ்ட் பாடியுடன் போஸ் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல், ஹேர்ஸ்டைலையும் மாற்றி செம ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்.

Share this post