'என்னைய டோட்டலா டேமேஜ் பண்ணிட்டார்' - பிரபல நடிகர் பற்றி தனுஷ் Open Talk !
2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது இந்த நடிப்புத்துறையில் 20 ஆண்டுகள் கடந்துவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

கோலிவுட் முதல் பாலிவுட், ஹாலிவுட் வரை பிரபலம் அடைந்து விட்டார். 20 ஆண்டு திரையுலக பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் 20 ஆண்டு காலம் தனது திரையுலக பயணத்தை கடந்துள்ளார். நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கிய நடிகர் தனுஷ், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களை காமித்தார். இதில் தயாரிப்பாளராக தனது வுன்டர்பார் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். முன்னதாக தனுஷ் தான் நடித்த அனேகன் குறித்து பேசிய சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் , கார்த்திக், அமைரா தஸ்தூர், ஆஷிஷ் வித்யார்த்தி , ஐஸ்வர்யா தேவன் , முகேஷ் திவாரி மற்றும் ஜெகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனேகன். நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட, மறுபிறவி என்பதனை கருப்பொருளாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

இந்த படம் குறித்து பேசிய தனுஷ், அனேகன் படத்தின் நடிக்கும் போது ‘பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் பேச்சே மக்களை இவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் அப்படி பட்டவருடன் நடிக்கும் போது நாமும் கொஞ்சம் இன்னும் மெனக்கிட வேண்டும்.
அதோடு டைலாக் டெலிவரி குறித்து டப்பிங்கில் பார்த்துக்கலாம் என நினைக்கும் போது அங்கேயும் அவர் என்னை ஓவர்டேக் பண்ணியிருவார். மொத்தத்தில் என்னை டோட்டலா டேமேஜ் பண்ணிட்டார்’ என தனுஷ் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
