தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை.. உண்மையில் இங்கு இருக்கா ? பலரும் அறியாத வரலாறு இதோ !
2008ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தசாவதாரம். இப்படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருப்பார்.

வித்தியாசமான கதையில் கமல்ஹாசன் விதவிதமான கெட்டப்பில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், இப்படத்தில் 12ம் நூற்றாண்டில் சோழ அரசன் கோவிந்தராஜர் சிலையை நடுக்கடலில் வீசுவதும், சுனாமியில் கோவிந்தராஜர் சிலை கரை ஒதுங்கும் வகையிலான காட்சிகள் இருக்கும்.

படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிலை சுனாமியில் கரை ஒதுங்கி இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது மட்டும் உண்மை இல்லை. சோழ மன்னனால் கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜர் சிலை வேறு இடத்தில் இப்போது மக்கள் வழிபட்டு வருகிறார்கள். வைணவத்திற்கும் சைவத்திற்கும் இடையில் நடந்தது என்ன? இதோ முழு விவரம்.

ராஜராஜ சோழன் வழியில் வந்த விக்கிரம சோழனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன். கங்கை கொண்ட சோழபுரத்தில் பிறந்த இவரை, கிருமி கண்ட சோழன் என்று அழைக்கப்படுவார். இவர் ஆட்சி புரிந்தது எல்லாம் தில்லை சிதம்பரம்.

குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்பு ஏற்பட்ட காரணம், 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்திவர்ம பல்லவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார். 11ம் நூற்றாண்டில் தில்லையை ஆண்ட குலோத்துங்க சோழன் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்ய இடம் பற்றாமல் போனது.

பின் சிவன் கோயிலில் ஏன் பெருமாள் சிலை இருக்க வேண்டும் என நினைத்து அந்த சிலையை கடலில் வீச குலோத்துங்க சோழன் முடிவெடுக்கிறார். அந்த காலகட்டத்தில் வைணவத்தின் மீது பெரும் பற்று கொண்டு வைணவத்தை பரப்பியவர் ராமானுஜர்.

இப்படி ஒரு நிலையில் விஷ்ணு சாமியை அகற்ற கூடாது கோவிலில் லட்சுமி கடாட்சம் போய்விடும். விஷ்ணு தான் பெரிய கடவுள் என்று விஷ்ணு சிலையை அகற்றப்படுவதை எதிர்த்து ராமானுஜர் சைவர்கள் மீது போராட்டம் செய்தார்.

இதனால் மன்னனுக்கும் வைணவம் வழிபடும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட குலோத்துங்க சோழன் வைணவ பக்தர்களின் கண்ணை தோண்டி எடுக்க உத்தரவு போட்டாராம். ராமானுஜனை தில்லையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

மேலும், ராமானுஜரும் தன் சீடர்களுடன் சேர்ந்து மைசூர் நோக்கி புறப்பட்டார். பின் தில்லை முழுவதும் சிவ வழிபாடு மட்டும் தான் நடைபெற்றது. அதோடு விஷ்ணு இருக்குமிடம் பார்க்கடல் தான் என்று கோவிந்தர் சிலையை கடலில் தூக்கி எறிந்து இருக்கிறார்.

தசாவதாரம் படத்தில் ராமானுஜரின் சீடராக கமல் நடித்து இருப்பார். அதில் கோவிந்தராஜன் சிலையோடு ஒரு மனிதரை கட்டிப்போட்டு கடலில் வீசப்பட்டது எல்லாம் படத்திற்காக உருவாக்கப்பட்டது. மேலும், குலோத்துங்க சோழன் சொன்ன இடத்தில் தான் பெருமாள் சிலையை கடலில் போட்டார்கள்.

அந்த இடத்தை பார்த்த வைணவ பக்தர்கள் அந்த சிலையை மீட்டு எடுத்தார்கள். அதை தில்லைக்கு கொண்டுவராமல் ராமானுஜர் திருப்பதியில் இருப்பதை தெரிந்து பெருமாள் சிலையை திருப்பதிக்கு கொண்டு செல்கிறார்கள்.
ஆனால், அந்த சிலை அடிபட்டு உடைந்து இருப்பதால் சிலைக்கு வழிபாடு செய்யக்கூடாது என் அந்நாட்டு மன்னன் உதவியால் ராமானுஜர் கோவிந்தராஜர் சிலையை சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்டு திருப்பதியில் வைத்து பிரதிஷ்டை செய்தார். பின் கடலில் வீசப்பட்ட அந்த சிலையும் திருப்பதியில் தான் உள்ளது.

திருப்பதியில் நரசிம்ம தீர்த்தம் பகுதியில் உள்ள மஞ்சள் நீலா கொண்டா இடத்தில் தெலுங்கில் நல்ல தண்ணி இடத்தில் உள்ளது. பெருமாள் குடியிருக்கும் இந்த நல்ல தண்ணி இடம் எப்போதும் நல்ல தண்ணியால் தான் நிறைந்திருக்கும் எனவும் கோடைகாலத்திலும் வறண்டு போகாமல் இருக்கும் எனவும் அங்கு இருக்கும் மக்கள் இது திருமாலின் மகிமையால் மட்டும் நடக்கிறது என சொல்வார்கள்.