'பீஸ்ட்' வைரலாகும் ஷூட்டிங் போட்டோஸ்.. ட்ரெண்டிங் ஸ்டில்ஸ் !
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ரசிகர்கள் பெரிதும் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து உருவான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் பின்னணி பணிகள் எல்லாம் முடிவடைந்துவிட்டது.

இதன் போஸ்டர்கள் வெளியாகி மக்களை ஆர்வத்தை தூண்டியது. அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து, வெளியான அரபிக்குத்து மற்றும் ‘ஜாலியோ ஜிமிக்கானா..’ பாடலகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் போட்டோஷூட் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this post