தந்தை முன்பு பிகினியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஐரா.. காதலருடன் நீச்சல் குளத்தில் நெருக்கம்.. வைரலாகும் பிக்ஸ்.. விளாசும் ரசிகர்கள் !
பாலிவுட் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவர் அமீர் கான். அமீர்கானின் மூத்த மனைவி ரீனா தத்தாவிற்கு பிறந்தவர் ஐரா கான். ஐரா கான், தனது 25வது பிறந்தநாளை அமீர் கான், ரீனா தத்தா, சகோதரர் ஜூனைத் கான், அமீர்கானின் மகன் ஆசாத் ராவ் கான், ஐரா கானின் காதலர் நுபுர் ஷிகாரே ஆகியோர் உடன் கொண்டாடினார்.

ஐரா கானின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவர் பிகினி உடையில் தனது 25வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

அருகில் தந்தை இருக்கும் போது இப்டி ஒரு உடையில் கொண்டாட்டமா என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

இதுதவிர காதலனுடன் நீச்சல் குளத்தில் ஐரா கான் ஜாலியாக குளிப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இதைப்பார்த்த ரசிகர்கள் இன்னும் கொந்தளித்து உள்ளனர். குடும்பமாக இருக்கும் கொண்டாட்டத்தில் இது போன்றவை எப்படி என கேள்வி கேட்டு வருகின்றனர்.
