வான வேடிக்கை நடுவே செலிப்ரேஷன் மோட்'ல் அமலா பால்.. இன்ஸ்டா பிக்ஸ் வைரல்..!

Amala paul photos in hot modern dress celebration mode

ஹரிஷ் கல்யாண் உடன் ஜோடியாக ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தது மூலம் முதல் படமே சர்ச்சையான கதையில் நடித்தவர் நடிகை அமலா பால். இருப்பினும், அப்படம் பலருக்கும் தெரியாமல் போன காரணத்தினால், ‘மைனா’ திரைப்படத்தில் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றார்.

மைனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய், தனுஷ், ஆர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் தலைவா, வேலையில்லா பட்டதாரி, தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற பல பிரபல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

இதனிடையே, தெய்வத்திருமகள், தலைவா படங்களில் பணியாற்றியதன் மூலம் அதன் இயக்குனரான ஏ.எல்.விஜய்யுடன் காதலில் விழுந்த இவர், இருவீட்டாரின் சம்மதத்துடனும் திருமணமும் செய்து கொண்டனர். ஒரு சில வருடங்களிலேயே இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பின்னர், இயக்குனர் விஜய் வேறு திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. விவாகரத்துக்கு பின்னர், படங்களில் நடிப்பது, வாய்ப்பு தேடுவது என கவனம் செலுத்தி வந்தார் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலா பால், தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இப்படி சூப்பர் பிசியாக இருந்து வந்த அமலா பால், கடந்த சில வருடங்களாக நெருங்கிய நண்பர்களுடன் பார்ட்டி, ஊர் சுற்றுவது, கிளாமர் உடைகளில் போட்டோஷூட் என நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும், அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

Amala paul photos in hot modern dress celebration mode

இறுதியாக தமிழில் ‘குட்டி ஸ்டோரி’ என்னும் ஆந்தாலாஜி படத்தில் நடித்திருந்தார். அடுத்து, இவர் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

Amala paul photos in hot modern dress celebration mode

பீச், டூ பீஸ் டிரஸ், கவர்ச்சி போஸ் என தாராளம் காட்டி புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் அமலா பால், தற்போது, அரைகுறை ஆடையில் ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

Amala paul photos in hot modern dress celebration mode

Share this post