'பீஸ்ட்' படத்திற்கு வந்த அஜித் குடும்பம்.. புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள் !
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் மற்றும் மகனுடன் சென்னை சத்யம் திரையரங்கில் கண்டு ரசித்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Share this post