நன்றி மறக்காமல் காப்பாற்றிய சிம்பு. கைவிட்ட தனுஷ்.
சிலம்பரசன் என்றால் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார்.. டப்பிங் பேச வர மாட்டார்.. அவரால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் என பொதுவாக திரையுலகில் பலரும் கூறுவதுண்டு..ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை அவர் தக்க வைத்து வருகிறார். மேலும்`, அவருக்காக உருகும் ரசிகர்களும் உள்ளனர். அவரின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.
ஒருபக்கம் சத்தமில்லாமல் பலருக்கும் அவரால் முடிந்த உதவிகளையும் சிம்பு செய்து வருகிறார். சரி விஷயத்துக்கு வருவோம். சிம்பு நடித்த மன்மதன் படத்தை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். இவர் தனுஷ் நடித்த திருடா திருடி படத்தை தயாரித்தவர். அதாவது, காதல் கொண்டேன் ஹிட்டுக்கு பின் அவரை வைத்து முதன் முதலாக படத்தை தயாரித்தவர் இவர். அப்படத்தின் வெற்றியே தனுஷின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
சில படங்களால் நஷ்டமடைந்த கிருஷ்ணகாந்த் ஒரு கட்டத்தில் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானார். மாரடைப்பு காரணமாக 2020ம் ஆண்டு இறந்து போனார்.இவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், சந்திரகாந்த், உதயகாந்த் என 2 மகன்கள் உள்ளனர்.
கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு பின் அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், தனுஷ் உட்பட திரைப்படத்துறையினர் யாரும் அவர்களுக்கு உதவவில்லை. தற்போது அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதை கேள்விப்பட்ட சிம்பு சில லட்சங்கள் கொடுத்து ஒரு வீட்டை லீஸுக்கு வாங்கி கொடுத்துள்ளாராம். மேலும், மன்மதன் 2 படத்தை எடுத்தால் உங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி தருகிறேன் எனவும் உறுதியளித்துள்ளாராம்.
எனவே, தனுஷை விட சிம்பு எவ்வளவோ மேல் என திரையுலகினர் பேசி வருகின்றனர்.