இப்டி உக்காந்து சாப்டாத்தான் அந்த பீசா ருசியா இருக்குமோ.. ரைசா வில்சனின் வைரலாகும் பிக்ஸ்
பாலிவுட் நடிகை கஜோல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் மொழியில் தனுஷ், அமலா பால் உள்ளிட்டோருடன் நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’. இதில் கஜோல்க்கு PAவாக நடித்திருப்பார் ரைசா வில்சன். மாடலிங்கில் பெயர் பெற்ற ரைசா , நிறைய விளம்பர படங்களில் நடித்திருந்தார்.
பின்னர், பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டைலான பேச்சு, உடை, மேக்கப் என இளசுகள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்து விட்டார். ஓவியாவிற்கு அடுத்தபடி அதிக வரவேற்பு அந்த சீசனில் ரைசாவிற்கு கிடைத்தது. ஆர்மி, பாலோயர்ஸ், பேன் பேஜஸ் என எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு பெற்றார்.
தனுசு ராசி நேயர்களே, ஆதித்யா வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என பல திரைப்படங்களில் நடித்த இவர், பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் bold ஆக நடித்து தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார்.
உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ரிலீஸ் ஆகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடித்துள்ள ரைசா, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். கிளாமர் உடை, பிகினி, டூ பீஸ் உடைகள் என தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

