உங்களோட பெரிய மனசு எங்களுக்கு நல்லாவே புரியுது.. பூர்ணாவின் Latest Photos
கேரளத்து பெண்ணான நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம். மாடலிங், நடிகை மற்றும் நடன கலைஞரான இவர், அம்ரிதா டிவியில் பங்கேற்ற ஒரு நடன நிகழ்ச்சி மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றவர். 2004ம் ஆண்டு, மஞ்சு போலொரு பெண்குட்டி என்னும் மலையாள மொழி திரைப்படம் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழில், பரத் உடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கிய இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தமிழில் கந்தக்கோட்டை, கொடைக்கானல், துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், கொடிவீரன், அடங்கமறு உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது, இறுதியாக, முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி AL விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ‘தலைவி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், படம் பேசும், பிசாசு 2, அம்மாயி, விசித்திரம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதில் ஒரு சில படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது அவ்வப்போது தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில், தனது மார்க்கெட்டை விட்டுவிட கூடாது என கவர்ச்சி கோலத்தில் புகைப்படங்களை தவறாது அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.



