இந்த வயதிலும் இப்படியா.. மாளவிகா போட்டோ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..
தமிழ் திரையுலகில் ‘உன்னை தேடி’ திரைப்படத்தின் மூலம் தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. பின்னர், ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றி கொடி கட்டு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார்.
‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’.. ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ போன்ற சூப்பர்ஹிட் பாடல்கள் இவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 90ஸ்களில் பிரபல முன்னணி நடிகர்களுடன் நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த போதிலும் திரையுலகில் தனது பெயரை இவரால் நிலைநாட்ட முடியவில்லை.
இதனால், சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் சிறு சிறு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்தார். தளபதியின் ‘குருவி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து போகும் மாளவிகா, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதன் நடுவே, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் இவர் தற்போது பதிவிட்டு வருகிறார். மீண்டும், நடிக்க வரும் எண்ணத்தில் தனது மார்க்கெட்டை ஏற்படுத்த இப்படி செய்வதாக ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர். அப்படி இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலாவி வருகிறது.



