விளைஞ்சு நிக்கும் ஜூஸி கரும்பு தோட்டம்.. வைரலாகும் இனியாவின் சூடான புகைப்படங்கள்
விமல் ஜோடியாக கிராமத்து வெகுளி பெண்ணாக வாகை சூடவா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா. இதற்கு முன்னர், பாடகசாலை, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். இருப்பினும்,வாகை சூடவா படத்தில் இனியாவின் நடிப்பை பாராட்டி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், பல விருதுகளும் கிடைத்தது.
தமிழ் மொழி மட்டுமல்லாது, 10திற்கும் மேற்பட்ட மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்த இவர், தமிழ் மொழியில், மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். பல முக்கிய கதாபாத்திரங்களில் நல்ல திரைப்படங்களில் நடித்த போதிலும் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை இவருக்கு கிடைக்க பெறவில்லை.
சமீபத்தில், மலையாள ஸ்டார் நடிகரான மம்முட்டியுடன் ‘மாமாங்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்தார். இனி கிளாமர் ரூட்டில் போனால் தான் பெயரை நிலைநாட்ட முடியும் என நினைத்த இனியா, தற்போது மாடர்ன் மற்றும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.


