புடவையில் தூக்கலான கிளாமர்.. ஸ்டைலிஷ் தமிழச்சியாக.. ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!
மடலிங்கில் பிரபலம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, நகுல் ஜோடியாக ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர். குரூப் டான்சராக தனது பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா தத்தா, விடாமுயற்சி மூலம் திரையுலகில் அறிமுகம் பெற்றார்.
பாயும் புலி, சட்டம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ்வர்யா, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் இவரது ராணி டாஸ்க் இன்னும் எவராலும் மறக்க முடியாத அளவிற்கு இவர் செய்திருந்தார். அந்த சமயம் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டது. இவரது சில செயல்கள் மக்களையும் சக போட்டியாளர்களையும் கோபப்பட செய்தது. அது இவருக்கு கலப்படமான விமர்சனங்களை பெற்று தந்தது.
தற்போது, தமிழ் மொழியில்கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக, தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.



