இணையத்தில் ட்ரெண்டிங் ஆன அரபிக் குத்து இவங்க அட்டகாசம் இன்னைக்கு தாங்காதே
தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது. அதே போல பிரம்மாண்டமாக இத்திரைப்படத்தை வெளியிட காத்திருக்கிறது.
இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. மேலும், இன்று மாலை 6 மணிக்கு காதலர் தின ஸ்பெஷலாக அரபி குத்து எனும் பாடலை இன்று வெளியிடவுள்ளது.
இதற்கான ப்ரோமோ வீடியோ கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்று யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் அனிருத் பாடி இசையமைத்துள்ளார்.
இன்று அரபி குத்து பாடல் வெளியாகும் நிலையில் காலை முதலே விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். அரபி குத்து hashtag-ஐ முதலிடத்தில் வைத்திருக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்கு அரபி குத்து பாடல் தான் இணையத்தில் ட்ரெண்டில் இருக்கும் என்பதை இப்போதே ஆரம்பித்து சொல்லாமல் சொல்லி விட்டனர்.